இறுதி முடிவு

இறுதி முடிவு

10 அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டு போனான்.
11 நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே,
12 கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.
13 சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது. கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

1 சாமுவேல் 13:10-14

சவுல் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டு, முதலாவதாக ராஜாவாக செயற்படும் தருணம் அது. சவுல் ராஜாவான தருணத்தில் அவன் ராஜா என்கின்ற எண்ணம் அவனிடத்தில் காணப்பட்டவில்லை. எனவே சவுல் என்னும் ஒரு தீர்க்கதரிசியை அவனுக்காக கடவுள் ஏற்ப்படுத்துகிறார். சவுல் என்ன செய்ய வேண்டும் என்று சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் முன் அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் போது அங்கு காத்திருக்கும்படியும் அறிவுறுத்தல்கள் வந்த போதும் காத்திருக்கமல் செயற்ப்பட்டான். இன்று சபையார் எண்ணுவதை போல, கடவுள் நாம் எதிர்ப்பார்க்கின்ற நேரத்தில் வருவதில்லை. அவர் சரியான நேரத்தில் வருவார். சவுல் இவைகளை அறியாததின் நிமித்தம் தானாக செயற்பட ஆரம்பித்தான்.

எம்மை பற்றி நமக்குள் இருக்கும் ஒரு தீய எண்ணம் அல்லது ஒரு தீய அனுபவம் ஒரு சரியான காரியத்தை பற்றிய எண்ணத்தையே முழுமையாக மாற்றி விடும்.

ஒரு நல்ல காரியத்தின் தாக்கத்தைவிட ஒரு பிழையான காரியத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பிழையான காரியமே மிக பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. தீயதிலிருக்கும் நல்லதை மட்டுமல்ல இறைவனையும் மறந்து விடுகின்றோம்.

இறைவன் எம்மை ஆசிர்வதிக்கும் நேரத்தில் மட்டும் நல்லவர் அல்ல! அவர் என்னை கைவிடமாட்டார் நாம் விசுவாசிப்போமானால். அவர் இந்த காலத்தில் மட்டும் இருப்பார் என்று நாம் சொல்லவே முடியாது.

சூழ்நிலை நேர் எதிராக இருந்தாலும் அந்த நேரத்தில் எம்முடன் இருக்கும் தேவனையே நாம் விசுவாசிக்கின்றோமா? உடைந்த வீட்டிலும், பிரச்சினையிலும், பிழையான பழக்கவழக்கங்களிலும், பிழையான உறவுகளிலும் இறைவன் கூடவே இருக்கின்றார்.

ஆவிக்குரிய ரீதியில் வளர்ந்தவர்களாக இருப்பீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் பிழையான தருணங்களிலும் கடவுள் உங்களோடு இருந்ததை உணர்ந்திருப்பீர்கள்.

நாம் ஆராதிக்கின்ற தேவன் எல்லா தீய அல்லது நேர் எதிரான இடங்களிலும் அவர் எங்களோடு இருக்கின்றார். ஏனென்றால் இறுதி முடிவு அவர் நியமித்தது. எமது வாழ்க்கை நடக்கும் வரை அவர் எங்களோடு இருக்கின்றார்.

இல் ஏவாள் பழத்தை சாப்பிட்டதும் அத்தோடு கதை முடிந்தது என்ற எண்ணம் பிசாசின் உள்ளத்தில் இருந்தது. நிஜத்தில் எல்லாம் முடிந்தது போல் காணப்படலாம். ஆனால் இறைவனனே இறுதி முடிவு எடுப்பவர். பிசாசின் தலையை நசுக்குவதற்கான அதிகாரத்தை எமக்கு தருகிறார்.

ஆதியாகமம் 3:15

தீய சூழ்நிலை என்பது முடிவல்ல. எமது சூழ்நிலை எம்மை அழித்து விட முடியாது. கர்த்தர் கைவிடமாட்டார். எச்சூழ்நிலையாயிலிருந்தாலும் கர்த்தர் உன்னை கைவிடுவதில்லை.

அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 8:28

விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

மத்தேயு 12:34-35

இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். அதனால் தான் தீயவைகளை பார்க்கும் விதத்தை நாம் மாற்ற வேண்டும். இருதயமாகிய பொக்கிஷத்தில் துதிகளை சேர்த்து வைப்போமானால் துதியே எம் நாவிலிருந்து வெளியே வரும்.

தீய காரியங்கள் அதிகமாக உங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றது. தீய எண்ணங்களை நாம் அதிகமாக சேமித்து வைக்கின்றோம் என்பது முக்கியமானது. நாம் தீயவைகளையா அல்லது நல்லவைகளையா சேமித்து வைக்கின்றோம் என்பது தான் முக்கியம்.

எமது வாழ்க்;கை நன்மையின் நிறைவாக இருக்க வேண்டும்.
உயர்ந்த காரியங்களை பேசுபவர்களோடு இணைந்து கொள்ளுங்கள். எமது வாழ்க்கையில் நாம் எங்கு போகின்றோமோ (தரிசனங்கள்) அந்த மொழி பேசுபவர்களோடு இணைந்து கொள்ளுங்கள். நாம் இருக்கும் சூழ்நிலைகளை பற்றி பேசுபவர்களோடு அல்ல.

என்னுடைய மொழி தெளிவானதாக இல்லாமல் இருக்கலாம். நன்மையை பேச ஆரம்பியுங்கள் நன்மையை பேசும் மொழி நம்மை தெளிவாக்கும். இவை அனைத்தும் உங்களுக்குள் எதை சேமித்து வைத்த உள்ளீர்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கபடுகின்றது. ஆண்டவரே எனது மொழியை மாற்றிவிடும்.

சவுல் “ராஜாவாவதற்கு” அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான் ஆனால் அவன் அதற்கு தயாராகவில்லை. அதே போல் தான் நாம் அநேக காரியங்களுக்கு அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கின்றோம் ஆனால் அதற்கு எமது இருதயம் இன்னும் தயாராகவில்லை.

ஆனால் இறைவன் சொல்லுகிறார் நான் என்னை அபிஷேகிக்கும்; போதே எமது இருதயம் தயாராகவில்லை என்பதை அவர் அறிந்திருக்கிறார். உங்களுடைய கீழ்ப்படிதலே உங்கள் இருதயத்தை வளர்க்கின்றது.

சவுல் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டான்இ கடவுள் ஒரு பொறுப்பை கொடுக்கின்றார். ஆனால் அதை செய்வதற்கு அவனுடைய இருதயம் தயாராக இருக்கவில்லை. அவன் மற்றவர்களால் உண்டாகும் பயத்தை சேமித்து வைத்திருந்தான்.

கீழ்ப்படிய முடியாத அளவிற்கு ஒரு தருணம் வரும் அந்த நேரத்தில் தான் கர்த்தருக்காக காத்திருங்கள். அதிகாரம் வரும்வரை சவுல் கீழ்ப்படிவுள்ளவனாய் சாமுவேலிடத்தில் காத்திருந்தான். ஆனால் அழுத்தங்கள் வர ஆரம்பித்தவுடன் கீழ்ப்படியாமற்போனான்.

சில நேரங்கள் இப்படிப்பட்டவர்களாய் நாமும் காணப்படலாம். கர்த்தர் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்க விரும்புகின்றார். கர்த்தர் சொல்லுகிறபடி பொறுமையை காக்கின்றவர்கள் தைரியமாய் தரித்தி;ருங்கள். கர்த்தரின் நன்மை உங்கள் மேல் உள்ளது. கர்த்தர் சொன்னதை செய்து முடிப்பார் தளாராதிருங்கள்.

எல்லா அழுத்தமான நேரத்திலும் கர்த்தரில் தரித்திருங்கள். நீங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதனால் கர்த்தர் இன்னொருவரை தேடவில்லை என்று அர்த்தம் இல்லை. யாரோ முதலில் வாய்ப்பை பெற்றுகொண்டார்கள் என்பதற்காக உங்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை என அர்த்தம் இல்லை.

கர்த்தரோ உங்களை போன்று இறுதி வரை காத்திருக்கின்றவர்களை கீழ்ப்படிபவர்களை தேடி கொண்டு இருக்கின்றார். கர்த்தர் தமது இருதயத்திற்கு பிரியமாவர்களை தேடி கொண்டு இருக்கின்றார்.

சவுலோ மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற முற்ப்பட்டான். ஆனால் தாவீதோ கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்ற முற்ப்பட்டான். கடவுள் சவுலை ராஜாவாக ஸ்தாபிப்பதினால் இறைவனின் திட்டம் என்னவென்றால் சந்ததிகளை சவுல் மூலமாக உருவாக்குவதே.

ராஜாவா இருப்பது மட்டுமே மனிதனின் திட்டம். ஆனால் கர்த்தர் சந்ததிகளை அவரின் திட்டத்தில் உருவாக்குவதே.

யாரோ ஒருவரால் செய்ய முடியாமல் போன ஒன்றுக்காக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள், என் என்றால் அதை உங்களால் மட்டுமே செய்து முடிக்க முடியும்.

யாரோ விட்டு போனது தான் ஆனால் அதில் ஒரு விஷேசித்த அபிஷேகித்து கடவுள் உங்களுக்காக வைத்திருக்கிறார். உங்களை கொண்டு பெரிய காரியத்தை செய்ய போகிறார். சாதாரணமாக எண்ணாதிருங்கள்.

நான் உங்களை இலகுவாக மன்னிக்கவில்லை. ஆனால் தேவனுடைய இருதயத்தில் பிரியமானவனாக இருக்க நான் மன்னிக்கின்றேன்.

எல்லாம் எளிதாக அல்லது இலகுவானதாக இருப்பதினால் நான் இன் நிலைக்கு வரவில்லை. இறைவனின் இருதயத்தை பின்பற்றுவதனால் நான் வந்திருக்கின்றேன்.

நான் பணத்தையோ, பதவியையோ, செல்வத்தையோ தேடி ஓடவது எனது நோக்கம் அல்ல. நான் இறைவனின் இருதயத்தை தேடி ஓடுகின்றேன்.

சில நேரத்தில் அது பைத்தியத்தை போல காணப்படலாம். பணமோ பதவியோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆண்டவரே நீர் விரும்பியதை செய்து முடித்தோன் உமக்கு பிரியமனவனாக இருந்தேன். ஆனால் இறுதி முடிவு உம்முடைய கையில், நீர் என்னை செழிக்க செய்வீர் என வாக்குத்தம் பண்ணியிருக்கிறீர்.

நீர் எங்கு போக சொன்னீரோ அங்கு நான் போனேன். நீர் பேச சொன்ன வார்த்தைகளை போனேன். இறுதி முடிவை செயற்படுத்துபவர் நீர் இவை அனைத்தையும் வெற்றியாய் செய்து முடிப்பவர் நீர்.

சவுல் செய்ய முடியாததை, என் பெற்றோரால் செய்ய முடியாததை, என் தலைவர்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்து முடிப்பீர்கள். செய்து முடிக்க இறைவன் பெலன் தருகின்றார். பணம் வரும் பதவிகள் வரும், சூழ்நிலைகள் மாறும்.

கர்த்தர் உங்களை சிறியதான இடத்தில் நிறுவுவார். அதற்கு எல்லையே இல்லை. கர்த்தரின் இருதயத்தை தேடி போனவர்கள் குறைவுப்பட்டதே இல்லை.

கர்த்தரின் இருதயத்தை தேடி போனவர்கள், தற்போது எதை தேடி போகிறார்கள் என்றே அதை மறந்து போய் இருக்கலாம்.

ஆண்டவரோ உம்மை நான் விட்டு ஓடி நான் பணத்தையும், தொழிலையும் தேடி ஓடிவிட்டேன். ஆனால் இதை விட உம்மை தேடி ஓடுவதையே விரும்புகிறேன்.

ஒரு நோக்கம் இல்லாமல் சென்றிருக்க நான் விரும்பவில்லை. உம்முடைய இருதயத்தை தேடி போனால் எனக்கு சந்தோஷம், சமாதானம் நிலைத்து இருக்கும்.

நான் பெறுமதி வாய்ந்த மனிதர்களோடு இணைந்து இருக்க நான் விரும்பவில்லை உயர்ந்த மனிதர்களை தேடி போக நான் விரும்பவில்லை. நீர் ஒருவர் மட்டுமே போதுமானவர். உம்மோடு இணைந்து இருப்பதையே விரும்புகின்றேன். உம்மை விட பெரிய தேவன் இல்லை. உம்முடைய நாமத்தை விட மேலாக நாமம் இல்லை. அவருடைய நாமத்தை உரத்து சொன்னால் பிசாசுகள் ஓடும். அவரே யெகோவா, அவரே இயேசு.

தாயின் கருவில் உருவாகுவதற்கு முன்னமே அவர் என்னை அபிஷேகித்தார். சிறிய ஜாதியாய் இருந்தாலும் உன்னை தெரிவு செய்து உயர்த்த கூடியவர் அவர்.

சூழ்நிலை உன்னை நெருக்கி, உன்னை அழிக்க முற்படலாம். ஆனால் இறுதி முடிவு அவர் கையில். அவர் வாக்குத்தத்தம் பண்ணிவிட்டார். தளராதே, சோர்ந்து போகாதே அவர் உன்னை உயர்த்த ஆயத்தமாய் இருக்கின்றார்.

கர்த்தருடைய வார்த்தை கீழ்ப்படிந்து பலிபீடத்திற்கு நேராக வந்து இந்த வார்த்தை எனக்கானது என அர்ப்ணிக்கும் போது கர்த்தர் எமக்குள் கிரியை செய்ய ஆரம்பித்துவிட்டர் என்று ஆர்த்தம்.

ஆனால் இவை ஒன்றுமே என் வாழ்க்கையில் நடக்கவில்லை என்று கண்ணீர் விட விரும்பவில்லை. என் வாழ்க்கையில் எல்லாம் சீராக உள்ளது என என்னலாம் ஆனால் இந்த சந்தர்ப்பம் உங்களை பற்றியது அல்ல! அவர் உங்களுக்குள் என்ன செய்ய போகின்றார் என்பதே.

என்ன அழுத்தமான சூழ்நிலையாக இருந்தாலும் நான் அவருக்கேன்று கீழ்ப்படியவதையே அவர் விரும்புகிறார். கர்த்தர் பேசும் போது ஒன்றுமே பேசாது போல் இருப்பது அல்ல.

பலிப்பீடத்திற்கு முன்பதாக என்னை நான் அர்ப்பணித்து ஒரு மாற்றத்திற்காக.
பலிப்பீடத்திற்காக முன்பதாக என்னை நான் அர்ப்பணிப்பது தேவனின் தொடுதலுக்காக.

தோற்றுபோனவர்களுக்கு தேவன் வாய்ப்பு தருகிறார். முக்கியமாக அவருடைய சத்தத்தை கேட்பவர்கள். தேவனோடு உள்ள உறவு எப்படிப்பட்டது என்றால் நாம் பதில் செய்வதுதான். சில நேரங்கள் ஒரு பக்கமாக சுயநல உறவே நாம் தேவனிடம் கொண்டுள்ளோம்.

தேவனிடம் பேச கூடிய ஓருவரைதான் தேவனால் நடத்த முடியும். தேவனோடு நல்ல உறவு வைத்துக் கொள்ள கூடிய ஒருவரை கர்த்தர் விரும்புகிறார். தீமையிலும் கர்த்தர் கூடவே இருக்கின்றார்.

தாவீதைப் போல புதிய பரிணாமத்தின் ஆசிர்வாதத்தின் திறவுகோல்கள் எமது கதவுகள் எமது வாழ்க்கையில் திறக்கும். அந்த கதவுகளை ஒருவராலும் அடைக்க முடியாது. தாவீதின் இருதயத்தை எமக்கு தருகிறார்.

This Post Has 2 Comments

  1. porno

    If you want to use the photo it would also be good to check with the artist beforehand in case it is subject to copyright. Best wishes. Aaren Reggis Sela

    1. Admin

      i’m so sorry. i didnt there is copyright issues. i will remove it rightway. sorry.

Leave a Reply