வெற்றியாய் நடத்துவார்

வெற்றியாய் நடத்துவார்

உலகத்தில் தற்காலத்தில் காணப்படும் பிரச்சினைகள் மத்தியில் என் வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்வது? கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் போதும், கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். கவலைப்படுவதினால் ஒரு நல்ல காரியமும் நடக்க போவதில்லை.

2 கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

எப்பொழுதும் எங்களை வெற்றியடையச் செய்கிறார், எங்கள் பிரச்சினைக்கான தீர்வை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றேன்.

2 கொரிந்தியர் 4:8-9 நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை, கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை, துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை, கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.

பவுல் எப்போதுமே, கர்த்தர் தன்னை எல்லா இக்கட்டிலுமிருந்து மீட்டுக் கொண்டார் என்பதை அறிந்திருக்கின்றார். சில நேரங்களில் எங்கள் பிரச்சினையை குறித்து மட்டுமே நாம் சிந்திக்கிறோம். கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் நல்ல காரியங்களை மறந்து விடுகிறோம். ஓவ்வொரு நாளும் நன்றி உணர்வோடு ஆரம்பிப்போம். கர்த்தர் செய்த நன்மையான காரியங்களை குறித்து நாம் சிந்திக்காவிட்டால், நாம் பிரச்சினைகளை குறித்து மட்டுமே சிந்திப்போம். உங்களையே நீங்கள் ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள்! எதை குறித்து சிந்திக்கின்றீர்கள்? என்று.

எமது வாழ்க்கையில் காணப்படும் சிறப்பானவைகளை நாம் மறந்துவிடுவதால், அந்த சிறப்பான காரியங்கள் வெளிப்படுவது இல்லை.

செல்லும் வழி அறியாமல் இருத்தல்.

இயேசு சொல்கிறார் நானே வழியாய் இருக்கின்றேன். ஒரு பாதை இல்லாமல் எப்போதும் நாம் இருப்பதில்லை. எனக்கு வழி தெரியாமல் இருக்கலாம், ஆனால் இறைவன் வழியை அறிந்து இருக்கிறார். சாத்தான் எப்போதுமே நாமக்கு எந்த காரியத்தை ஞாபகப்படுத்துவான் என்றால் இங்கு வழி இல்லை என்பதையே, பிறகு மன உளைச்சலுக்கு ஆளாக்குவான், மனவிரக்தி, அவநம்பிக்கையை உருவாக்குவான். அவநம்பிக்கை தான் இதிலேயே மோசமான ஒன்றென்றால் இது வழியை அறியாமல் செய்யும். அவநம்பிக்கை உள்வரும் போது எமக்கு வழியே இல்லை என்ற உணர்வு ஏற்படும். எனவே விட்டுவிடுகிறோம் அல்லது சோர்ந்து போகிறோம்.

சில வேளை இறைவனின் மீதுள்ள நம்பிக்கையே அற்றுப் போய்விடுகிறது.

1 பேதுரு 5:9 விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.

உங்கள் வாழ்க்கையில் இறுதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். எதிரியான சாத்தான் எம்மிடம் பொய்யாய் பேசும் போதே, கூறுங்கள் சாத்தானே நீ ஒரு பொய்க்காரன் என் தேவன் உண்மையுள்ளவர் அவரை நான் விசுவாசிக்கின்றேன் என்று எனவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒரு தீர்மானத்தை எடுப்போம்.

பிலிப்பியர் 4:6-7 நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

இறைவன் நமக்கு கொடுத்தவைகளை குறித்து முறுமுறுப்போமானால் இறைவன் எப்படி அதைவிட அதிகமாக தருவார்.? சுகவீனனாக இருப்போமானால் நன்றி ஆண்டவரே நீர் செய்த எல்லாவற்றிற்கும். எனக்காக தந்த எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

உங்களை நேசிக்கும் பிள்ளைகள் உங்களுக்கு இருப்பார்கள் என்றால் ஆதுவே சிறந்த ஆசீர்வாதம்.

நாளைய பிரச்சினைகள்

எனது வாழ்க்கை முழுவதுமே நாளைய பிரச்சினையை தீர்க்கவே முற்ப்படுகின்றேன். நாளைய பதில்களை இன்றே எதிர்ப்பார்க்கின்றேம். அது நம்பிக்கையோ, விசுவாசமோ அல்ல! தேவன்; எல்லாவற்றையும் சொல்லுவதுமில்லை.
எல்லாவற்றையும் எமது கண்களுக்கு முன்பாக கொண்டு வருவதுமில்லை. அப்படி செய்தால் நாம் விசுவாசிக்க தேவையில்லை. ஒவ்வொரு நாளும் அவரை நாம் விருவாசிப்பதே அவர் விரும்புகிறார். ஒவ்வொரு நாளும் நாம் முகங் கொடுக்கும் காரியங்களுக்கு முகங் கொடுக்க கிருபையும் அளிக்கின்றார். எம்மால் செய்ய முடியாததை அவர் எமக்கு தருவதில்லை. அவர் அதற்கு கிருபையளிக்கின்றார்.

மத்தேயு 19:26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

உன்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அவர் ஒரு சோதனையை அளிப்பதில்லை. அதுமட்டுமன்றி அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை கடவுள் ஆயத்தம் செய்து தருகிறார். இந்த வார்த்தை தேவைப்படுபவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்றால் இவ்வார்த்தை உங்களுடையது. எவ்வளவ கடினமாக இருந்தாலும் எல்லாவற்றிலுமிருந்து வெளியே வர வழியை கடவுள் ஆயத்தம் பண்ணுகிறார்.

ஜெபம்

நாம் ஜெபம் செய்து விட்டு மறந்து விடுகிறோம். ஆனால் இறைவன் மட்டும் மறப்பதே இல்லை. கடவுள் அந்த ஜெபத்திற்காகவே வேலை செய்து கொண்டிருக்கின்றார். பிரச்சினையில் இருக்கும் போதே ஜெபம் செய்ய ஆயத்தமாகுங்கள். வேறு யாருக்காவது பிரச்சினை இருக்கும் போது ஜெபம் செய்யுங்கள். ஜெபம் செய்ய ஒரு முறை கிடையாது. நாம் எங்கு வேண்டுமென்றாலும், என்ன நேரம் வேண்டுமென்றாலும் ஜெபம் செய்யலாம். வார்த்தையை உபயோகித்து ஜெபம் செய்யலாம், அமைதியாக ஜெபம் செய்யலாம். ஜெபத்தில் தேவன் பதில் தந்தவைகளை குறிப்பு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஜெபம் செய்வதில்லையெனின் இறைவன் வேலை செய்வதில்லை, சிலர் இதை விசுவாகிக்க மாட்டீர்கள்.

யாக்கோபு 4:6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

நான் ஜெபம் செய்யவில்லையெனின் தேவன் எனக்காக ஜெபம் செய்யும் ஒருவரை ஏற்ப்படுத்துகிறார். என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், இறைவனால் வேலை செய்ய முடியாது என நான் சொல்லவில்லை. அவர் ஒன்றும் செய்வது இல்லை என்று நான் சொல்லுவதுமில்லை. அவர் பெரியவர் அவரால் எல்லாம் செய்ய முடியும். கடவுள் சாதாரணமாக எப்படி வேலை செய்கின்றார் என்றால். நாம் ஜெபம் செய்ய ஆரம்பித்த உடன் விசுவாசம் கட்டவிழ்க்கப்படுகிறது.

தளரமாட்டோம்

1 கொரிந்தியர் 10:13 மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.

எம்மால் தாங்க முடியாத அளவிற்கு அவர் சோதனைகளை தருவதில்லலை. நாம் விழும் தருவாயில் இருந்தாலும் அறிக்கையிடுங்கள். கர்த்தர் என் காலை இடரவிடமாட்டார். தாங்கி கொள்ளுவதற்கும் அதிகமாக ஒன்றும் அவர் தருவதில்லை, ஒவ்வொரு சோதனையிலும் இருந்து வெளிவர வழியை ஆயத்தம் பண்ணுகிறார். எமக்கு எல்லா பதில்களும் தெரியும். சில நேரங்களில் எமக்கு காணப்படும்; பிரச்சினை குறித்து, அதிகமாக யோசித்து குழம்பி விடுகிறோம். நமக்கு ஒரு பிரச்சினை இருக்கும் போது, அதே பிரச்சினை இன்னொருவருக்கு இருந்தால் அவருக்கு என்ன ஆலோசனை கொடுப்போம் என சிந்தித்து பாருங்கள். அதுவே எமக்கான பதில்.

எமக்கு எல்லா பதில்களும் தெரிந்ததே. ஆனால் செய்வதில் அல்ல பயன்படுத்துவதில் தான் பிரச்சினையே. மிகவும் ஆழமாக பிரச்சனையை குறித்து யோசிப்பதை விட்டு விட்டு கர்த்தர் எல்லா காரியத்தையும் பார்த்து கொள்வார் கர்த்தர் நல்லவர் என்பதை விசுவாசியுங்கள்.

கர்த்தர் நல்லவர்

நாகூம் 1:77 கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

விசுவாசத்தினால் முன்னோக்கி செல்வோமானால் கர்த்தரின் நன்மை எமக்கு காணப்படுகிறது. எல்லா தேவையிலும் இறைவனை விசுவாசிப்போம் மனிதனிடத்திற்கு போகும் முன் இறைவனிடத்திற்கு போவோம். இறைவனுக்கு முன்பாக மனிதனிடத்திற்கு போக வேண்டுமென்றால் அந்த காரியத்தை தேவனின் இருதயத்தில் வைப்பார்கள். கர்த்தரிடத்தில் செல்வதன் மூலம் அவரை கணப்படுத்துவோம்.

நீதிமொழிகள் 3:5-8 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

நாம் அதிகமாக சிந்திப்பதினால் அதிகமான மனஉளைச்சல் போன்ற பல அகப்படுகின்றோம். ஆகவே நாம் நோயினாலும் பதிக்கப்படுகின்றோம். கர்த்தர் செய்யும்படி வழிநடத்தினால் முன்னோக்கி செல்லுங்கள். ஆனால் என்ன செய்ய வேண்டுமென்றே அறியாமல் இருந்தால், கர்த்தர் உங்களை நடத்துவார் என விசுவாசியுங்கள். கர்த்தர் எம்மை வழிநடத்துகிறார் என்று அறியாமலே சில நேரங்களில் நாம் வழி நடத்தப்படுகின்றோம்.

கர்த்தரோ எமது நேர அட்டவனையின்படி வழிநடத்தவதில்லை அவர் தாமதமாகவும் அதை செய்யமாட்டார் சீக்கிரமாகவும் செய்யமாட்டார். கர்த்தர் சில நேரங்களில் கடைசி நிமிடம் வரை காத்திருக்க செய்கிறார்; எனென்றால் எமது விசுவாசத்தை அதிகரிக்கிறார்.

திடீர் என கதவுகள் திறக்கப்படும்

அப்போஸ்தலர் 16:25-26 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன, எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.

எமது வாழ்க்கையில் நல்லிரவில் நாம் காணப்படலாம். வாழ்க்கை கருமையானதாக காணப்படலாம். இரவில் பவுலும் சீலாவும் தேவளை துதித்து பாடினார்கள் நீங்களும் அவ்வாறு துதித்து பாடுகின்றீர்களா? எமது வாழ்க்கை அதிகலவான பிரச்சினைகள் இருக்கும் போதே இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றீர்களா? தீடீரென்று சிறை கதவுகள் திறந்தன வேதம் சொல்லுகிறது போல திடீர் என கதவுகள் திறக்கப்படும் திடீரென சிறப்பான காரியங்கள் நடப்பதை காண்பீர்கள்.

அதிகமான பிரச்சினையேடு நித்திரைக்கு செல்லலாம். நாளை தினம் எல்லா பிரச்சினையும் தீரும். இறைவன் செய்ய நினைத்ததை யாராலும் தடுக்கவே முடியாது. சில நேரங்களில் ஆண்டவரே என்னிடம் இருந்து நீக்கீப்போடும் என இலகுவாக ஜெபித்து விடுவோம். ஆனால் பிரச்சினைகளுக்குக ஊடாக தேவன் உங்களை நடத்தி செல்வார். அதுவே உங்கள் வாழ்விற்குசிறந்த ஒன்றாக இருக்கும்.

சங்கீதம் 23: 4 4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

யாரோ ஒருவருக்கு இறைவன் இதை செய்ய வேண்டும் என nஐபிக்கும் நாங்கள், அதே நாம் நினைத்தால் இலகுவாக முடித்துவிடலாம். ஆனால் நாம் அதை செய்யாமால் இறைவன் செய்யும்படி விண்ணப்பித்துக் கொண்டிருப்போம்.

மாற்கு 4:35, 5:1 அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.

சில நேரங்களில் நாம் எதிர்ப்பார்த ஒன்று நமக்கு கிடைக்காத நேரத்தில், இயேசு நித்திரையாய் இருக்கிறார் என எண்ணுகிறீர்களா? அவர்களோ போல முறுமுறுக்க ஆரம்பிக்கிர்களா?

வெற்றியாய் நடத்துவார்

மாற்கு 5:1 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள்.

எதிர்ப்புகள் வந்தாலும் மாறுக்கரையை ஆடைந்தார்கள். கர்த்தர் எவற்றை எல்லாம் வாக்குத்தத்தம் பண்ணினாரோ அவைகளை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். சில நேரங்களில் அது கடினமாக இருக்கலாம். ஆனால் இறைவன் நடத்தியே முடிப்பார். எனக்கு தெரியும் அவர் விசுவாசமுள்ளவர். பதில்கள் இல்லாமல் எம்மை தாள்ளாடவிட மாட்டார். எமது வாழ்க்கையில் சோதனைகள் காணப்படலாம் நாம் காத்திருக்கும் போது தான் சோதிக்கப்படுகின்றோம்.

எமது கடமை பயிற்சியில் சித்தி பெறுவது மட்மே. எதற்காக சோதனைக்கு உட்பட்டேன் என ஆராய்வதற்கு அல்ல. விசுவாசம் தான் வாழ்க்கையளிக்கின்றது.

Leave a Reply