பயத்தை எதிர்கொள்!

பயத்தை எதிர்கொள்!

எல்லோரும் எப்போதாவது பயத்தை எதிர்கொள்கிறார்கள், ஆனால் விசுவாசிகளாகிய நாம் பயத்தை எச்சரிக்கைக்கான அடையாளமாக எடுத்து குழம்பிவிட கூடாது. ஏனென்றால் எச்சரிக்கையானது வேகமான போகும் கார் தன் பாதையிலிருந்து விரைவாக நம்மை நகர்வது போல நாம் ஏற்கனவே சென்றுகொண்டிருந்த பாதையை விட்டு நம்மை நகர்த்தும். எவ்வாறாயினும், இந்த இறுதிக் காலங்களில், நம்மைப் திகிலடையச்செய்ய சத்துருவான் பயத்தை ஆயுதமாக தூண்டிவிடுவான்.

கடவுளின் வாக்குறுதிகள் மீதான நம் நம்பிக்கையை அழிக்கும் முயற்சியில் பிசாசு இந்த உணர்ச்சியைப் பயன்படுத்துகிறான். வைரஸ்கள் மற்றும் நோய்களிலிருந்து நாம் குணப்படுத்துதல் மற்றும் எதிரான சூழ்நிலையிலிருந்து விடுதலையைப் பெறுதல் பற்றிய உண்மையை, நாம் ஏற்கனவே வேதத்தில் இருந்து கற்றுக்கொண்ட வார்த்தையை விடாமல் பற்றி கொள்வதன் மூலம் அதிலிருந்து ஜெயம் பெறலாம்.

  • “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோத். 1:7). *

சாத்தான் உங்களை பெலவீனப்படுத்த விரும்பி, பயத்தின் ஆவியைக் கொண்டு வருகிறான். அடிமைத்தனத்தின் ஆவியைக் கொண்டு வருகிறான். அவற்றை மேற்கொள்ள தேவன் நமக்கு வேத வார்த்தையின் வெளிச்சித்தின் ஊடாக தெளிந்த புத்தியின் ஆவியை கொடுத்து இருக்கிறார்.
கடவுள் நம்மை நேசிக்கிறார், நமக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர விரும்புகிறார்; அவருடைய பரிபூரண அன்பு பயத்தைத் தூக்கி எரிகிறது என்று நம்புவதன் மூலம் நமது உணர்ச்சிகளின் மீது நம்முடைய அதிகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நாட்டில் பொருளாதார சூழ்நிலையானது மக்கள் அனைவரையும் அரசாங்கத்தை சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளி உள்ளது. நாளைய நாள், எமது வருமானம், தொழில், வியாபாரம் அனைத்தையும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இது யாரும் எதிர்பாரா அபாயம் ஒன்று.

தேவ பிள்ளைகளாகிய நாம் அரசாங்கத்தை சாராமல் தேவ வார்த்தையை சார்ந்தவர்களாக இருந்து இந்த சூழ்நிலையையும் பயத்தையும் எதிர்கொள்ளவோம்.

ஆமென். 🙏🏻

This Post Has 2 Comments

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a Reply