சந்தோஷம் நதியாய் பாயும்.

சந்தோஷம் நதியாய் பாயும்.

Click here to Sermon PDF Download

கடவுள் தந்த சிறிய தரிசனங்களை குறைவாய் மதிப்பிடாதிர்கள். அவை மிக பெரிய உயரத்தில் எம்மை கொண்டுப்போய் சேர்க்கும்.

யோவா 15:11
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

இயேசு இவ்வசனத்தின் அடிப்படையில் ஒரு இலக்கை நிர்ணைக்கின்றார். இயேசுவும் சந்தோஷமும் எதிரானது ஒன்று அல்ல. அது போலவே இறைவனும் சந்தோஷமும் எதிரானவைகள் அல்ல.

நான் எதை கர்த்தருக்காக செய்தாலும் சந்தோஷத்துடனே செய்கிறேன். நான் செய்கிற ஊழியத்தை சந்தோஷத்தோடு செய்கிறேன்.

நீங்கள் சந்தோஷமாக கருதாத ஒன்றை சகித்து கொள்ள முடியாது. இயேசு சிலுவையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டது அதன் விளைவு சந்தோஷத்தை தந்ததால்.

இந்த பாத்திரம் என்னை விட்டு எடுத்துக் கொள்ளும் என் சித்தம் அல்ல உம் சித்தமாகட்டும் என்று சொன்னதன் அர்த்தம் சந்தோஷம் முன்பதாக காணப்பட்டதால்.

ஒரு திருமணத்தில் இருவரும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால் அவர்களால் எதையும் சகித்து கொள்ள முடியாது.

ஆதனால்தான் எமது ஊழியத்திற்கு வரும் அனைவரையும் சந்தோஷமாயி இருப்பவதையும் களிகூறுவதையும் நாம் விரும்புகின்றோம். ஆகவே நாமும் சந்தோஷத்துடனே கடந்து வரக்கடவோம்.

ஒரு smily அனுப்பும் போது நாம் உணர்வது குறைவாய் இருப்பினும் நாம் அனுப்பும் smily நாம் உணரதாத அதிக உணர்வை வெளிப்படுத்தம்.

எரே 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

ஆனால் இயேசுவோ அவரில் சந்தோஷம் உள்ளவராக இருக்கும்படி விரும்புகிறார். நாம் உணர்வுகளின் குழப்பத்திலிருந்து உணர்வுகளை கட்டுப்படுத்துவதை விரும்புகிறார். இதை நாம் எப்படி செய்வது????

ஞானவன் ஆன சாலமோனின் உதவியோடும் நீதிமொழிகள் புத்தகத்தின் உதவியோடு செய்ய போகிறோம்.

கடவுளை பற்றிய அறிதல் அல்லது கற்கை உங்கள் உள்ளே ஒரு தாக்கத்தை செலுத்தவில்லையாயின் (உணர்வுகளில்) உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமற்ற ஒன்றை, நீங்கள் உங்கள் உணர்வின் தாக்கத்தில் செய்ய முடியும். (உ-ம் தற்கொலைகள்)

உணர்வின் தாக்கத்தால் நாம் எடுக்கும் தீர்மானங்கள் அடுத்த 18 வருடங்கள் அதற்கான தாக்கத்தை அனுபவிக்க நேரிடும்.

 

நீதிமொழிகள் 4:18
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.

கர்த்தருடைய வார்த்தை எமக்குள்ள ஒளியை உண்டுபண்ணும்.
சந்தோஷம் என்பது நாம் செல்லும் இடம் அல்ல அது நாம் செல்லும் பாதை. அது தேவனுடைய வார்த்தையோடு இனைந்தது.

 

நீதிமொழிகள் 4:19
துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.

இப்பகுதி கடவுளை அறிந்தவன் பற்றியோ அறியாதவன் பற்றியோ சொல்லவில்லை.

நீங்கள் நீதிமானாய் இருதும் பிழையான முடிவை எடுக்ககூடும்.
இயேசுகிறிஸ்து என்கிற இடத்தில் நாம் இருக்கலாம். ஆனால் நீங்கள் செல்லும் பாதையானது உங்களை இறைவனின் சந்தோஷத்திலிருந்து வேறு பிரிக்கிறதாய் இருக்கும்.

 

நீதிமொழிகள் 4:20 -21
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக் அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.

நீதிமொழிகள 4:23
எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,
அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். 
நம் உடலை பாதிக்கிற சிறிய காரியங்களை விட்டுவிட்டு, உள்ளத்தை பாதிக்கும் பெரிய காரியங்களை இலகுவாக அனுமதித்து விடுவோம்.

சரிரத்தை பாதுகாத்து கொள்ளும் நாம் அநேக நேரங்களில் இருதயத்தை பாதுகாக்க தவறுகிறோம். 


உங்கள் உள் உணர்வே உங்கள் வெளிப்படையான நடத்தையாகும். உங்கள் உணர்வுகளின் தாக்கம் இல்லாமல் எப்போதும் நாம் தீர்மானங்கள் எடுப்பதே இல்லை.


உங்கள் விசுவாசம் உங்கள் உணர்வுகளில் தாக்கம் செலுத்தும் அல்லது உணர்வுகள் விசுவாசத்தில் தாக்கம் செலுத்தும.; இதனால்தான் எம்மால் உணர்வையும் விசுவாசத்தையும் பிரிக்கவே முடியாது.


பிரபல்யமான அநேகர் தனது பாதுக்காப்பிற்காக அநேக பாதுகாவலர்களை வைத்துக்கொள்வார்கள். ஆனால் பிரபல்யமான நபர் தனது கணனி அல்லது தொலைபேசி மூலம் மக்களின் கருத்துகளை உள்ளே இலகுவாக அனுமதித்து விடுவார்கள். 


இதனால் நம் உடலுக்கு வரும் பாதிப்பை தவிர்ப்பதற்கு பாதுகாவலர்களை வைத்துகொள்ளும் நாம், பாதுகாக்கப்படவேண்டிய இருதயத்தை பாதிக்கிற வகையில் செயற்படுகிறோம்.


பின்பு சந்தோஷத்தை இழந்து விட்டேன் என புலம்புவோம். பாதுகாக்க வேண்டிய இருதயத்தை பாதுகாப்பது அவசியம்.


நாம் யார் என்பதில் இருந்தே எமது செயற்பாடுகள் வெளிபடும். எல்லோரையும் இருதயத்தில் அனுமதிக்க முடியாது அனுமதிக்க கூடாது.


நீங்கள் சிந்திக்கும் எல்லாவற்றையும் சரியென நம்பவும் பிழையான ஒன்றாகும்.

நீதிமொழிகள் 4:20
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.

மத்தேயு 15:11
வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது,
வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.

உங்களுக்கு தோன்றியதை எல்லாவற்றையும் நீங்கள் பேசினால் அது உங்கள் இருதயத்தை பாதிக்கும். எது எம்மை பாதிக்கும் என்றால் நாம் பேசியதுதான்.
உங்கள் இருதயம் பாதுகாக்கபட்டுள்ளதா? உங்கள் இருதயத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், உங்கள் உணர்வுகளை சொந்தமாக்க வேண்டும்.


நாம் எமது உணர்வின் வெளிப்பாட்டிற்காக மற்றவர்கள் செய்ததை காரணம் காட்டுவோம் என்றால் நாம் உணர்வை சொந்தமாக்கவில்லை என்று அர்த்தம்.
அதற்கு பதிலாக நான் கோபம் கொண்டேன் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். 

நான் தோற்று போனேன், நான் கைவிட்டேன், அவர்கள் என்னை மோசமான மனநிலைக்கு என்னை தள்ளினார்கள் என்று குற்ற சாட்டு சிறுபிள்ளை தனம் போல உள்ளது.


நாம்  முதிர்தியடைந்தவர்கள் யாரும் உங்களை எங்கும் தள்ளமுடியாது. உங்கள் சந்தோஷம் மற்றவர்களிடத்தில் இல்லை. அவர் என்னை சந்தோஷபடுத்தவில்லை என்றால், உங்கள் சக்தியை அல்லது வல்லமையை இன்னோருவரிடத்தில் வழங்குவீர்கள் என்றால், உங்களை நீங்களே சிறை அடைத்து வேறு ஒருவர் உங்களுக்காக சாவியை கொண்டுவருவார் என்று எதிர்பார்ப்பது போன்று.


யாரோ ஒருவர் செய்த தவறுக்காக உங்கள் உணர்வுகளுக்கான பொறுப்பை நாம் பெற்றுக்கொள்ளும் போது அந்த சூழ்நிலையே முற்றிலும் மாறிவிடலாம்.
வேலை, குடும்பம், உறவுகள் எமது உணர்வை பாதிக்கும் என்றால், நாம் வேறு யாருக்கோ எமது சாவியை கொடுத்து இருக்கிறோம். நாம் எமது இருதயத்தை பாதுகாக்க தவறியிருக்கிறோம்.


எமது மனநிலையை பாதுகாப்பதற்து நாம் வேறு ஒருவரை தேடுகிறோம். உங்கள் சந்தோஷம் தான் உங்கள் வேலை.

(நீங்கள் என்னில் தரித்திருந்தால்) வசனத்திற்கு கீழ்ப்படிதல் என்பது அது உங்கள் தீர்மானம். தீர்மனத்தை செய்யும் போது அது சந்தோஷம் நதியாய் பாயும்.
உங்கள் அம்மாவோ, உங்களை திருமனம் செய்தவரோ, உங்கள் நண்பணோ உங்கள் உறவினர்களோ உங்கள் இருதயத்தை காப்பவர்கள இவர்கள், அது நீங்களே.


உங்கள் சோகம், தோல்வி , சோர்வு, ஏமாற்றம் எல்லாவற்றிற்கும் போறுப்பேற்று கொள்ளங்கள். அது உங்களுடையது. உணர்வுகளை நாம் பொறுப்பேற்க்க தவறிவிடுகிறோம். நாம் உணர்வுகளை பொறுப்பேற்பது அவசியம்.

தொலைபேசி நான் என்ன சொல்லுகிறேனோ அதைதான் செய்யும். நான் என்ன அதில் செலுத்துகிறேனோ அதைதான் வெளிபடுத்தும்.எமது உணர்வுகளால் நாம் வீழ்ந்திடாமல் இருக்க கற்றுக்கொடுக்கும் படி அழைத்திருக்கிறார்.


அழகான பாடல்களை எழுதிய தாவீது, ஏன் எனக்கு தூரமானீர், மறுபடியும் உம்மை எப்போது உம்மை காணபோகிறேன், இன்னும் எத்தனை நாளைக்கு என்னை துரத்துவிர், என்று எல்லாம் தாவீது சோகத்தில் இருந்து கோபத்திற்கு கடந்து சென்றான். ஏனக்கு எதிராக வருவார் தலைகளை அழித்து விடும், குழந்தைகளின் தலையையும் ஆழித்துவிடும் என பாடினான்.


எமது உணர்வுகளை சொந்தமாக்க முடியும் என்றால் உணர்வை என்னால் கட்டுபடுத்த முடியும்.

சங்கிதம் 42:11 ( தாவீது சொந்தமாக்கினான் நான் தேவனை ஆராதிப்பேன்.)
11என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு;
என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
நீதிமொழிகள் 4:20
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி, என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.


அவர் பேசுகிறார் ஆனால் நாமோ செவிசாய்ப்பதில்லை.
யாரோ ஒருவர் தனக்கு மகன் இல்லையே ஆராதனைக்கு வருவதற்கு என வருந்தும் போது, நாம் குடும்பமாய் ஆராதனை வந்து மகனைகுறித்து குற்றம் சாட்டுகிறோம்.


எமது இருதயம் எமது மனம் எங்கு இருக்கிறதோ அதன் அடிப்படையில் தான் வேலை செய்கிறது.
உங்கள் வாழ்க்கை உங்கள் மனதை உடைக்க விடுவோம் என்றால் அது எம்மை பாதிக்கும்

 

நீதிமொழிகள் 4:25
உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக் உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.

ஒரு வேளை நாம் கடந்த காலத்தை குறித்து கவலைபடுகிறோம் அல்லது எதிர்காலத்தை குறித்து கவலைபடுகிறோம்.

 

யோவா 15:11
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

அவரின் சந்தோஷம் என்னில் நதியாய் பாயும்.

5/5

Leave a Reply